படத்தில் 4 கதைகள் ஒன்றாக பயணிக்கிறது. இந்த நான்கு கதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் காதலை மையப்படுத்தி செல்கிறது. ஒன்று பள்ளிப்பருவ காதல், மற்றொன்று இளமைப்பருவத்திலும், மற்றொன்று 30 வயதிலும், நான்காவது 49 வயதிலும் வளர்கிறது. இந்த நான்கு காதலையும் மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதில் எந்த கதையும் சோர்வு ஆகாதபடி மிகவும் ரசிக்கும்படியாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு கோலத்தில் புள்ளிகள் தள்ளித்தள்ளி இருந்தாலும் கடைசியில் ஒரு கோலமாக அனைத்தும் புள்ளிகளும் இணைவது போல் இந்த நான்கு காதலும் ஒரே புள்ளியில் இணைகிறது. சிறுவயது மாணவனாக நடித்திருக்கும் நிஷேஸ், மாணவி ஸ்வேதா மற்றும் மாணவனின் தந்தை மனதில் நிற்கிறார்கள். 20 வயது காதல் ஜோடிகளாக கார்த்திக் ரத்தனம், ஐரா, 30 வயது காதல் ஜோடிகளாக வெற்றி, மும்தாஜ், நான்காவதாக என் தீபன் சோனியா கிரி 49 வயதாகியும் திருமணமாகாத தீபன். கல்லூரி படிக்கும் மகள் இருக்கும் சோனியா கிரி என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குணசேகரனின் ஒளிப்பதிவும், சுதாகர் அகஸ...
Entertainment is Everything..