சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். கமர்ஷியல் படங்களை இயக்குவதால் பொதுவாகவே சுந்தர்.சி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், இந்த படம் தொடக்கத்தில் பெரிதாக பேசப்படவில்லை.
தொலைக்காட்சியில் திரையிட்ட பிறகே படத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் வெளி வந்தன. இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் IMDB இணையதளத்தில், தமிழ் சினிமாவில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தால், என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று கூறினார்.

மற்றொருவரின் கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, வின்னர் 2001-ஆம் ஆண்டு ரிலீசாக வேண்டிய படம், 2 வருடங்கள் தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்விக்கு பிறகு, நாங்கள் சொந்தமாக கிரி படத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. அன்பே சிவம் 2003-ம் ஆண்டிலும், கிரி 2004-ம் ஆண்டும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அதனால் அதிக பிரசங்கித்தனம் பண்ண வேண்டாம் தம்பி, அறிவாளினு நினைச்சிட்டு முட்டாளா திரியுரிங்க.. என்று பதிலளித்தார்.There block busters..😊👍 https://t.co/moMHiG5yrE— KhushbuSundar ❤️ (@khushsundar) June 16, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.