முகென் ராவின் மனதை மயக்கும் மயக்கிறியே!!
சரிகமா ஒரிஜினல்ஸின் அடுத்த வெளியீடான பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் உருவாகியிருக்கும் ‘மயக்கிறியே’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பாடலின் முன்னோட்டம், சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. ‘ஃபிளாஷ் மாப்’ என்று அழைக்கப்படும் நடன நிகழ்ச்சியின் போது, இந்த பாடலில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘பிக்பாஸ்’ பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி ஆச்சரியப்படுத்தினார்.
மேலும், ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்திற்கிடையே முகென் ராவ் நடனமாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் ஆட, ஒட்டுமொத்த திரையரங்கமும் விழாக்கோலமானது.
ஏ என் எஸ் என்டெர்டயின்மென்ட் வழங்கும் ‘மயக்கிறியே’ பாடலை ஆனந்த் ஆர், ஆர் எம் நாகப்பன் மற்றும் நிக் ஸ்டெல்சன் ஜோ ஆகியோர் தயாரித்துள்ளனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
அனிவீ இசையில், அனிருத் குரலில் உருவாகியிருக்கும் இந்த பாடலை ஜிம்மி ரூத் இயக்கியிருக்கிறார்.
மணிகண்டன் ஒளிப்பதிவையும், அப்சர் நடனத்தையும், கமல் படத்தொகுப்பையும், சூர்யா ராஜீவன் கலைத் துறையையும் கவனித்துள்ளனர்.
இந்த பாடலுக்கு யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.