விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விஜய் அடுத்ததாக மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மகிழ் திருமேனி, அருண்ராஜா காமராஜ், பாண்டியராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் விஜய்யிடம் கதை சொல்லியிருக்கின்றனர். இதில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு பிறகு விஜய், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யுடன் இணைவது குறித்து அருண்ராஜா காமராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,
தான் விஜய்யிடம் ஒரு படத்திற்கான ஒருவரிக் கதையை சொன்னதாகவும், அது அந்த படம் உருவாக இது சரியான நேரம் இல்லை என்றும் கூறினார். மேலும், இது ஒரு நல்ல அனுபவம், அதற்கான நேரம் வரும் போது அது நடக்கும். விஜய் சாரிடம் கதை சொல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அடுத்த முறை அவரை சந்திக்கும் போது, அவர் என் தோள்களின் மீது கைவைத்து, என்ன நண்பா எப்போ ஷூட்டிங் போக போறோம் என்று கேட்ட வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்டிகள் 15 படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க வேண்டும் என்று போனி கபூர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அருண்ராஜா இந்த படத்தில் ஒப்பந்தமாகும் பட்சத்தில் இதை முடித்த பின்னர் விஜய் படத்திற்கான பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.