தெலுங்கு படத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழில் கழுகு படத்தின் மூலம் பரிட்சயமான நடிகையானார் பிந்து மாதவி. தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக கழுகு 2 படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியிருக்கிறது. இந்த நிலையில், தான் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிந்து மாதவி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தான் மற்றும் தனது குடியிருப்பில் இருக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். எனது குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், தானும், தனது வீட்டினரும் அடுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.One of the resident in my apartment is tested covid positive and so it’s self isolation for all of us in the building for the next 14 days.... #redzone pic.twitter.com/l1MaTP7UDm
— bindu madhavi (@thebindumadhavi) May 30, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.