பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் இவர் தயாரித்துள்ள படங்களின் மூலம் பாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் அறிமுகமாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கரண் ஜோஹர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை பார்த்தேன். கடவுளே, என்ன ஒரு அற்புதமான படம். தனுஷின் நடிப்பு அபாரம். படத்தின் விறுவிறுப்பான காட்சிகளால் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன். அதேபோல், அட்லி இயக்கிய பிகில் படத்தையும் பார்த்தேன். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம். அட்லியின் அனைத்து படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். மசாலா படங்களை எடுப்பதில் இவர் ஒரு மாயாவி என்று கூறியிருக்கிறார்.
Thank you sir @karanjohar lots of love pic.twitter.com/cuXORME2WP
— atlee (@Atlee_dir) May 29, 2020
கரண் ஜோஹருக்கு இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் போது அட்லி அடுத்ததாக ஷாருக் கானுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தை ஷாருக் கானுடன் இணைந்து கரண் ஜோஹரும் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.