ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் பொன்மகள் வந்தாள். 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா - சூர்யா தயாரித்துள்ள இந்த படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.
படத்திற்கு நல்ல விமர்சனமும், ஜோதிகா, பார்த்திபனின் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தவறாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக படக்குழுவிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், இயக்குனர் பிரட்ரிக் இது சம்பந்தமாக கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது,
படத்தில் AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்களது கவனக்குறைவால் நடந்திருக்கிறது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு, AIDWA இயக்கத்தின் பெயரையும், லோகோவையும் உடனடியாக நீக்குவதாக உறுதியளிக்கிறோம். இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.