லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி - மாளவிகா மோகனன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் மாஸ்டர். படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலரும் தயாராகி இருக்கிறது. டிரைலர் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சாந்தனு இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் கலந்துகொண்ட உரையாடலில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை தியேட்டரில் பார்க்கும் போது கண்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறியுள்ளார்.
வாத்தி கம்மிங் பாடல் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது நான் டெல்லியின் இருந்தேன். இந்த பாடலில் தளபதியின் ஆட்டமும், அவரது ஒவ்வொரு நகர்வும் படக்குழுவை உறைய வைத்துள்ளது. அங்கிருந்த அனைவருமே கைதட்டி, விசிலடித்து கொண்டாடினர் என்றார்.
எக்ஸ்.பி.பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, கவுரி கிஷன், ரம்யா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் இந்த படத்தை வெளியிடுகிறார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.