நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 20 பேரை மட்டும் வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை துவங்க கடந்த 21-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 20 பேரை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பை துவங்க முடியாது, குறைந்தது 50 பேராவது தேவை என்று சின்னத்திரை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த தமிழக அரசு அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.05.2020 முதல் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், சிறிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பை துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 4 கோடிக்கு குறைவான பட்ஜெட் கொண்ட படங்களின் படப்பிடிப்பை 60 நபர்களுடன் துவங்க தமிழ அரசு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தங்க மீன்கள் மற்றும் தரமணி படங்களை தயாரித்த ஜே.சதீஷ்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,60பேர்கொண்ட குழு சின்னத்திரைபடட்பிடிப்பில் கவந்துகொள்ளலாம் என அறிவித்த மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கும் அமைச்சர் @Kadamburrajuofl அவர்களுக்கும் நன்றி. இந்த எண்ணிக்கையிலான குழுவுடன் சிறுபடங்களும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதித்தால் சினிமாவும் படிப்படியாக மீளத்தொடங்கும்
— JSK Satishkumar (@JSKfilmcorp) May 30, 2020
60 பேர்கொண்ட குழு சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர்
கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றி. இந்த எண்ணிக்கையிலான குழுவுடன் சிறு படங்களும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதித்தால் சினிமாவும் படிப்படியாக மீளத்தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே கோரிக்கையை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ளார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.