தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களான விவேக், வடிவேலு இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் 90-களில் இருவருக்குள்ளும் தொழில் போட்டி இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் காமெடி மற்றும் மீம் கிரியேட்டர்களுக்கு அவரது பங்களிப்பு குறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று காலை விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் அடங்கிய மீம் ஒன்றை பகிர்ந்து, ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது அந்த மீம்ஸை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர் வடிவேலு என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்த விவேக், உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! என்று கூறினார்.
ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!”👌 pic.twitter.com/Kna8xPdtKy
— Vivekh actor (@Actor_Vivek) May 29, 2020
விவேக்கின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விவேக்கிற்கு நல்ல மனசு, இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! https://t.co/BaKsmsOzuH
— Vivekh actor (@Actor_Vivek) May 29, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.