மாஃபியா படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர்கள் அறிவழகன், மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதில், விவேக் இயக்கும் பாக்ஸர் படத்திற்காக அருண் விஜய் தனது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராகி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். சஞ்சனா கல்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறைத்து மதியழகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஏற்கனவே அனுராக் காஷ்யப்புடன் இந்த பாத்திரத்திற்காக பேசி, அறிவிப்புகளை வெளியிட இருந்த நிலையில், சிக்கல் ஏற்பட்டு அதனை கைவிட்டதாக கூறினார். மேலும், அருண் விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றங்களில் நடிப்பதாகவும் அவர் கூறினார். படப்பிடிப்பு முடிக்க மொத்தமாக 60 நாட்கள் தேவைப்படும். எம்.எம்.ஏ குத்துச்சண்டை வீரராகவும் வரும் அருண் விஜய், பின்னர் தனது தோற்றத்தை மாற்ற எடையைக் குறைக்க வேண்டும். அதுவரை அனுராக் காஷயப்பை காத்திருக்க கட்டாயப்படுத்த முடியாததால் அந்த வேடத்தில் நடிக்க இயக்குநர் விவேக் தன்னிடம் கேட்டதாகக் கூறியுள்ளார்.Best wishes Producer @MathiyalaganV9 on your debut in #Boxer @arunvijayno1 @vivekkumarknan @EtceteraEntert1 @immancomposer@ritika_offl @DoneChannel1 @krishnanvasant @peterHeinOffl @ganesh_madan@stunnerSAM2 @hinasafaa234 @itsjosephjaxson pic.twitter.com/YOPnuIFgHn— Hema Rukmani (@Hemarukmani1) June 24, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.