மலையாள சினிமாவில் பல படங்களில் எழுத்தாளராகவும், கதையாசிரியராகவும் பணியாற்றிய சச்சி என்கிற கே.ஆர்.சச்சிதானந்தம், பிரித்விராஜ் - பிஜூ மேனன் நடித்த ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் மூலம் பிரபலமானார்.
48 வயதாகும் இவருக்கு கடந்த வாரம் திடீரென இதயத்துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சச்சி தனது கண்களை தானம் செய்ததால், அவரது கண்கள் அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது கண்கள் விதிகளுக்குட்பட்டு விரைவில் வேறு ஒருவருக்கு பொருத்தப்படவிருக்கிறது.
சச்சியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சச்சி கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து இருக்கிறது. இவரது உடல் கொச்சியில் இருந்து சொந்த ஊரான திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.