தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், போலீஸ் கதாபாத்திரங்களை மையப்படுத்தி சாமி, சிங்கம், சாமி ஸ்கொயர், சிங்கம் 2, சிங்கம் 3 படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.