Skip to main content

ஜி5-ல் வெளியானது காயத்ரி ரகுராமின் யாதுமாகி நின்றாய்

தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின்   கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றாய்'.

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில்  நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும்  அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகிய நிலையில், தற்போது தற்போது `யாதுமாகி நின்றாய்' படத்தின் மூலம்  இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நடிகர் வஸந்த் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படம் சாதாரணமான, பின்னணியில் நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் சொல்லும்  முதல் தமிழ் படமாகும்.
ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை  கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் தனது வாழ்க்கையில் பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களையும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாக உருவாகி இருக்கிறது.

கிரிஜா ரகுராம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி  மற்றும் அச்சு இசையமைக்க, கபிலன், அச்சு பாலாசிரியரியராக பணிபுரிந்துள்ளனர்.

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

ரஜினி ரசிகராக சுஷாந்த் - தில் பேச்சரா படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ந் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவரது தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர், நடிகைகள் தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. பலரும் தங்களது அனுபவங்களை பகிர ஆரம்பித்தனர். இந்த நிலையில், சுஷாந்த் கடைசியாக நடித்த 'தில் பேச்சரா' படம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். காரணம், தில் பேச்சரா படத்தில் சுஷாந்த் சிங் தீவிர ரஜினி ரசிகராக நடித்திருக்கிறார். படத்தில் அவர் ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருக்கிறார். சுஷாந்த் சிங் பயன்படுத்தும் செல்போன் கவரில் கூட ரஜினியின் படம் இடம்பெற்றிருக்கிறது. நான் ரஜினியை வணங்குகிறேன் என்ற வசனமும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ...

அதிகப்பிரசங்கித்தனம் பண்ண வேண்டாம் - கமல் ரசிகருக்கு குஷ்பு பதிலடி

சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். கமர்ஷியல் படங்களை இயக்குவதால் பொதுவாகவே சுந்தர்.சி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், இந்த படம் தொடக்கத்தில் பெரிதாக பேசப்படவில்லை. தொலைக்காட்சியில் திரையிட்ட பிறகே படத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் வெளி வந்தன. இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் IMDB இணையதளத்தில், தமிழ் சினிமாவில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தால், என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று கூறினார். There block busters..😊👍 https://t.co/moMHiG5yrE — KhushbuSundar ❤️ (@khushsundar) June 16, 2020 மற்றொருவரின் கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, வின்னர் 2001-ஆம் ஆண்டு ரிலீசாக வேண்டிய படம், 2 வருடங்கள் தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்விக்கு பிறகு, நாங்கள் சொந்தமாக கிரி படத்தை எ...

காதல் பல புள்ளிகள் சேர்ந்த அழகிய கோலம் - கேர் ஆப் காதல் விமர்சனம்

படத்தில் 4 கதைகள் ஒன்றாக பயணிக்கிறது. இந்த நான்கு கதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் காதலை மையப்படுத்தி செல்கிறது. ஒன்று  பள்ளிப்பருவ  காதல், மற்றொன்று இளமைப்பருவத்திலும், மற்றொன்று 30 வயதிலும், நான்காவது 49 வயதிலும் வளர்கிறது. இந்த நான்கு காதலையும் மிக நேர்த்தியாகவும்,  சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதில் எந்த கதையும் சோர்வு ஆகாதபடி மிகவும் ரசிக்கும்படியாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு கோலத்தில் புள்ளிகள் தள்ளித்தள்ளி இருந்தாலும் கடைசியில் ஒரு கோலமாக அனைத்தும் புள்ளிகளும் இணைவது போல் இந்த நான்கு காதலும் ஒரே புள்ளியில் இணைகிறது. சிறுவயது மாணவனாக நடித்திருக்கும் நிஷேஸ், மாணவி ஸ்வேதா மற்றும் மாணவனின் தந்தை மனதில் நிற்கிறார்கள். 20 வயது காதல் ஜோடிகளாக கார்த்திக் ரத்தனம், ஐரா, 30 வயது காதல் ஜோடிகளாக வெற்றி, மும்தாஜ், நான்காவதாக என் தீபன் சோனியா கிரி 49 வயதாகியும் திருமணமாகாத தீபன். கல்லூரி படிக்கும் மகள் இருக்கும் சோனியா கிரி என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குணசேகரனின் ஒளிப்பதிவும், சுதாகர் அகஸ...

ஒத்த செருப்பு குறித்து கேலி செய்த தி.மு.க எம்.பி. - தக்க பதிலடி கொடுத்த பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் படங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு விருது அறிவித்தது.           அதனை குறிப்பிட்டு தி.மு.க எம்.பி எஸ்.செந்தில்குமார் அண்ணனுக்கு பாஜாவில் ஒரு சீட்டு பார்சல் என்று கேலி செய்துள்ளார். அவரது அந்த கருத்துக்கு சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது கருத்துக்கு பார்த்திபன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,           ‘இரவின் நிழல்’ என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும் வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! (மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம். அது ஒரு கொக்கி வார்த்தை-மேலும் படிக்க)           பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு D...

திடீரென ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முகென் ராவ் !!

 முகென் ராவின் மனதை மயக்கும் மயக்கிறியே!! சரிகமா ஒரிஜினல்ஸின் அடுத்த வெளியீடான பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் உருவாகியிருக்கும் ‘மயக்கிறியே’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பாடலின் முன்னோட்டம், சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. ‘ஃபிளாஷ் மாப்’ என்று அழைக்கப்படும் நடன நிகழ்ச்சியின் போது, இந்த பாடலில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘பிக்பாஸ்’ பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். மேலும், ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்திற்கிடையே முகென் ராவ் நடனமாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் ஆட, ஒட்டுமொத்த திரையரங்கமும் விழாக்கோலமானது. ஏ என் எஸ் என்டெர்டயின்மென்ட் வழங்கும் ‘மயக்கிறியே’ பாடலை ஆனந்த் ஆர், ஆர் எம் நாகப்பன் மற்றும் நிக் ஸ்டெல்சன் ஜோ ஆகியோர் தயாரித்துள்ளனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அனிவீ இசையில், அனிருத் குரலில் உருவாகியிருக்கும் இந்த பாடலை ஜிம்மி ரூத் இயக்கியிருக்கிறார். மணிகண்டன் ஒளிப்ப...