கொரோனா ஊரடங்கில் காமெடி நடிகர் கும்கி அஸ்வின் தனது காதலியை கரம்பிடித்தார். முன்னதாக இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இவரது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த யாரும் பங்குபெறவில்லை. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் திரையுலகினர் பலரும் அஸ்வின் - வித்யாஸ்ரீ தம்பதியினருக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளம் மூலமும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகனான அஸ்வினும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகளான வித்யாஸ்ரீயும் காதலித்து வந்தனர். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ். பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
அஸ்வின் - வித்யாஸ்ரீ காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தத் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
அஸ்வின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அஸ்வின். பின்னர் எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு இவர் நடித்த கும்கி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. பின்னர், தில்லு முல்லு, நையாண்டி, ஈட்டி, ஜாக்பாட், கணிதன், தமிழ்படம் 2, தர்மபிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.