மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூர்ணா. கேரளாவில் உள்ள கொச்சியில் வசித்து வரும் இவருக்கு, அன்வர் அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் அறிமுகமாகியிருக்கிறார். தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த நகைக்கடை முதலாளி என்றும், தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் பூர்ணாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சிலமுறை அவர்கள் செல்போனில் உரையாடியதாகத் தெரிகிறது.
அதன்பிறகு சில நாட்களுக்குப் பிறகு, அன்வரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி சிலர், பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடம் அன்வரின் புகைப்படம் என்று டிக்டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பூர்ணாவின் வீடு, கார் உள்ளிட்டவற்றை செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
இதுகுறித்து பூர்ணா அன்வர் அலியிடம் கேட்டதற்கு, அவர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அன்வர் அலி என்ற போலி பெயரை பயன்படுத்தி பூர்ணாவிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.