தமிழ்த் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் ராகவா லாரன்ஸ். தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
இவரது தம்பி எல்வின், திரையுலகில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். லாரன்ஸ் முன்னதாக தனது தம்பியை நடிகராக அறிமுகம் செய்து வைக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அது நிறைவேறாமல் இருந்தது. இந்த நிலையில், எல்வின் நேற்று பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று என் தம்பியின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அவனை நான் ஆச்சரியப்படுத்த நினைப்பேன். அதேபோல் இந்த பிறந்தநாளிலும் அவனுக்காக பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு தான் இது. அவனது கனவே, தான் ஒரு நடிகராக வேண்டும் என்பது தான். அது இப்போது நிறைவேறப்போகிறது. நீண்ட நாட்களாக நாங்கள் காத்திருந்தது ஒரு நல்ல திரைக்கதைக்காக தான். தற்போது அது நிறைவேறியிருக்கிறது.

ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் இந்த படத்தை எல்வின் நாயகனாக நடிக்க, ராஜா என்பவர் இயக்குகிறார். தற்போது நிலவிவரும் கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.Happy birthday my brother Elviin, Here’s my birthday surprise for you. pic.twitter.com/zzp7Anzcl5— Raghava Lawrence (@offl_Lawrence) June 20, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.