கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸின் மரணம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
ஜெயராஜின் மனைவி மற்றும் மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ரஜினி ஆறுதல் கூறியதாக கராத்தே தியாகராஜன் கூறியிருக்கிறார்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.