இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்புக்கு வர மறுப்பதால், அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தவறான செய்தி வெளியானது. அதனை குறிப்பிட்டு அதற்கு பதிலளித்த ரகுல், யார் படப்பிடிப்பை துவங்கியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். நான் வேலை செய்ய காத்திருக்கிறேன் என்று கூறினார்.
ரகுலின் இந்த பதிவை குறிப்பிட்டு இயக்குனர் ரவிக்குமார் கூறியிருப்பதாவது, நான் பணிபுரிந்த நடிககைகளில் சிறந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங். எனவே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நிலைமை சீராகி, படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறினார்.

When will we have responsible journalism. When will media start checking facts . 😂 stooping so low just for some extra hits 🤷♀️ plz tell me who is starting shoot and where @BOWorldwide cos I am dying to work 🤣 https://t.co/41YPxWAcYX— Rakul Singh (@Rakulpreet) June 26, 2020
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இஷா கோபிகர், யோகி பாபு, சரத் கெல்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அயலான் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.@Rakulpreet is one of the most professional artists I have worked with. It's extremely unfortunate that the media falls prey for rumors and being an accomplice.— Ravikumar R (@Ravikumar_Dir) June 26, 2020
We as a team are in full spirit and can't wait to resume work with her and finish our shoot after normalcy returns. https://t.co/BZVxuVSEF2
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.