தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்து ஐதாராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளதால் கணவர், குடும்பம், விவசாயம் என பொழுதை கழித்து வந்த சமந்தாவுக்கு கொரோனா இருக்குமோ என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சமந்தா தனது தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டிக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில், ஷில்பா ரெட்டி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
எனவே சில நாட்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட சமந்தாவுக்கும் கொரோனா இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.