வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று பாடகி ஜானகி ரசிகருடன் பேசும் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகியாக இருப்பவர் எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் சுமார் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். 4 தேசிய விருதுகளையும், 33 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2016-ல் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது தனது மகனுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்னதாக, இவருக்கு உடல்நலம் சரியில்லை என்றும், காலமானதாகவும் வதந்தி பரவியது. ஆனால் அவரது குடும்பத்தினர் அதனை மறுத்தனர். இந்த நிலையில், நேற்றும் ஜானகி உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவி வர அவருடைய மகன் முரளி கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தீனா அந்த தகவலை மறுத்து ஜானகி நலமுடன் இருப்பதாக விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே ஜானகி ரசிகர் ஒருவருடன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஜானகி பேசியிருப்பதாவது,
எல்லாருமே போன் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை போன் தெரியுமா? எதற்கு இந்த மாதிரியான செய்தியை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல, ஆறாவது முறையாக இதுபோன்ற செய்தி பரவியிருக்கிறது. சும்மா வேண்டுமென்றே இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு இதே மாதிரி செய்தி வந்த போது நான் வாட்ஸ் அப்பில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம். இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் உடல்நலம் சரியில்லாத சிலரின் உடல்நிலையை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்ல திட்டினேன். மறுபடியும் இப்படி செய்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.