வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண் பித்தர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
எலிசபெத் ஹெலனின் புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக அதனை எதிர்கொள்வதாக கூறினார். மேலும் பணத்திற்காக எலிசபெத் புகார் கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கிடையே நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இந்த திருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், பீட்டர்பாலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முறையாக விவாகரத்து பெறவில்லை. வனிதா - பீட்டர் பால் திருமணத்திற்கு முன்பாகவே அவரது முதல் மனைவி புகார் அளித்திருக்கலாமே, அவர்களது திருமணத்தை முன்பே ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா தனது வாழ்க்கையில், பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது அவருக்கு நல்லவிதமாக அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் எதுவும் மாறாது என்று கூறினார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு பதிலளித்த வனிதா, தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாத ஒன்றில் நீங்கள் எந்த வகையிலும் அக்கறை கொள்ய இயலாது. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே நீங்களும் இந்த விஷயத்தில் தலையிடாதீர்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் சொல்ல வேண்டாம். இது ஒன்றும் உங்களுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்ல. நான் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை என்று கூறினார்.

— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 29, 2020ரசிகர் ஒருவர் லக்ஷ்மி ராமகுருஷ்ணனின் கருத்து குறித்து கேட்க, இது ஒரு சிறிய உலகம். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தயவுசெய்து உங்களது வேலையை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.