தமிழ்த் திரையுலகின் பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். கடந்த 1995-ல் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்துக்கும் போதிய வரவேற்பு கிடைக்காததால் திரையுலகிலிருந்து விலகினார்.
பின்னர் 2000-ல் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2007-ல் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரையும் 2010-ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் மட்டும் இருக்கிறார். வனிதா தற்போது தனது மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
தனது அப்பா விஜயகுமாருடனான மோதலால் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்ற இவரை, பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக்கியது. தனது அதட்டலான தொனியால் பிரபலமடைந்த இவர், பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில், வனிதா, கிராபிக் டிசைனரான பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்யப்பேதாவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
பீட்டர் பால் - வனிதா விஜயகுமாரின் திருமணம் சென்னையில் இன்று கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்தது. இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வனிதா விஜயகுமாருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.