வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள டேனி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகம் முடங்கியிருக்கும் நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டு இன்றோடு 100 நாட்கள் ஆகியிருக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமலும், வாங்கிய கடனை செலுத்த முடியாமலும் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தான் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி-யில் வெளியாகியது. பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படமும் வெளியாகியது. அட்லி தயாரித்துள்ள அந்தகாரம் படமும், ஜே.எஸ்.கே.சதீஸ்குமார் தயாரிப்பில் 3 படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றன.
இந்த நிலையில், பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி படமும் பிரபல ஓடிடி தளமான ஜி5-ல் வெளியாக இருக்கிறது. ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ல.சி.சந்தானமூர்த்தி இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.A perfect suspense thriller that will send chills down your spine is coming your way soon! Watch #Danny a ZEE5 original film coming soon on #ZEE5! @varusarath @tridentartsoffl pic.twitter.com/HBuivGEPvh— ZEE5 Tamil (@ZEE5Tamil) June 23, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.