இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது இந்தி திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாரிசு அரசியல் குறித்து விமர்சித்து வருகின்றனர். பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் பற்றியும், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோலும் விருது நிகழ்ச்சிகளில் காட்டிய பாரபட்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தப் பதிவை குறிப்பிட்டு தமிழ் நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார்.
அதில், வெளியிலிருந்து வரும் ஒருவர் வெற்றி பெற்றால் மட்டுமே கொண்டாடப்படுகிறார், கடவுளாகப் பார்க்கப்படுகிறார். கடின உழைப்பு என்றும் தோற்காது என்ற வழக்கமான வாக்கியம், பொதுவில் வெற்றி பெற்றவர்களை வைத்து தான் கொண்டாடப்படுகிறது. உங்களை ஒதுக்கி, உங்கள் முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி, முதுகில் குத்துவார்கள். இந்த கசப்பான அனுபவங்கள் அத்தனையையும் தாங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அஸ்வினின் இந்த பதிவு தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அஸ்வினின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு பிரபல ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

நமது தமிழ் திரையுலகில் ஏராளமான சுஷாந்த்கள் சம்பளம் பெறாமலும், ஆதரவின்றியும், அடையாளமின்றியும் வலம் வருகிறார்கள். எனினும் அதைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேமராவுக்கு முன் புன்னகைக்கின்றனர். சிலர் இதுபற்றி என்னிடம் பேசுகிறார்கள், சிலர் அவமானத்தினால் ஏற்படும் வலியுடன் அமைதி காக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் தல அஜித்தின் அப்போதைய நிலையையும், இன்றைய நிலையையும் நினைத்துப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.There are many a #SushantSingRajput in our tamil film industry who get no payment ,no support,no recognition yet they put a brave front n smile to e camera.few speak 2me few remain silent in pain 2suffer humiliation in a diff. form. To so many such,remember thala Ajith then n now https://t.co/L3wCUZSVVd— vasuki bhaskar (@vasukibhaskar) June 20, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.