பழம்பெரும் நடிகை உஷா ராணி (62) நேற்று காலமானார். சென்னை அயப்பாக்கத்தில் வசித்து வந்த இவருக்கு, சில தினங்களுக்கு முன்பாக சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான உஷா ராணி, எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியுடன் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசனுடன் குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். உஷா ராணியின் கணவரான சங்கரன் நாயர் கடந்த 2005-ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. உஷா ராணியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.