தமிழ் சினிமாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் உள்ளிட்டோர் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்தவர் மலேசியா வாசுதேவன். பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார்.
தொடக்கத்தில் மலேசியாவில் ஒளிபரப்பான நாடகங்களில் நடித்த வந்த இவர் பின்னர் சென்னை வந்து தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் இளையராஜா இசயைில் இவர் பாடிய ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிகுஞ்சு வந்ததுன்னு என்கிற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் எதிரொலிக்க இவருக்கு பாடல் வாய்ப்புகள் குவிந்தன. சுமார் 8 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கும் இவர் குரலில் பல்வேறு ஹிட் பாடல்கள் இன்னமும் மனதை உருக்கி வருகின்றன. அத்துடன் 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை படமாக எடுக்க அவரது மகனும், நடிகருமான யுகேந்திரன் முடிவு செய்திருக்கிறார். மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். விரைவில் அதற்கான பேச்சுவார்த்தை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படத்திற்கான வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.