ஆக்ஷன் படத்திற்கு பிறகு விஷால் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். ஆனால் இருவருக்கிடையேயான மனஸ்தாபத்தால் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து விஷால் அந்த படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்தார். தற்போது அந்த படம் பாதியில் நிற்கிறது.
அதேநேரத்தில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரு வாரம் மட்டும் படப்பிடிப்பு மீதமிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கிறது.
இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் கிளிம்ஸ் டீசரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

விஷாலின் விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இணையதளம் வாயிலாக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.Excited to Announce that our movie #Chakra’s Trailers will be launched this Saturday in 4 South Indian Languages#VishalChakra #ChakraTrailer pic.twitter.com/mgxndhR5oS— Vishal (@VishalKOfficial) June 24, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.