பூர்ணா |
நகை கடை அதிபர் எனக்கூறி பூர்ணாவை திருமணம் செய்ய வேண்டும் என்றும், போலி பெயரில் பணம் பறிக்க முயன்றதாகவும் அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த கும்பலை கைது செய்தனர். இந்த நிலையில், நடிகை பூர்ணா சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், திருமணம் என்ற சொல்லை கேட்டாலே பயம் வருகிறது. எனவே எனது பெற்றோரிடம் எனக்கு சில காலங்கள் அவகாசம் கொடுக்கும்படி கேட்டிருப்பதாக கூறியுள்ளார்.
பூர்ணா தற்போது ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும், கங்கனா ரனாவத்தின் தலைவி படத்திலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லாக்கப் படம் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.