கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் அம்மாவாக நடித்திருந்தார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர், இன்று தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த இருக்கின்றனர். இவர் தற்கொலை முயற்சி செய்யும் முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை குறிப்பிட்டு இது எனது கடைசி வீடியோ, எனக்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.