தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அஜித்தின் வாலி, வரலாறு ஆகிய படங்களின் இந்தி ரீமேக் உரிமை தற்போது விலைபோகியிருக்கிறது.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இந்த படங்களின் ரீமேக் உரிமையை கைப்பற்றியிருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ராகுல், அவரது படங்களை மும்பையில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். ராகுல் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களில் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வலிமை படத்தின் வணிகத்திலும் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறார்கள்.
வாலி படத்தில் அஜித் அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரத்திலும், வரலாறு படத்தில் அப்பா, மகன் என மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது.
இதில் வாலி படத்தை எஸ்.ஜே.சூர்யாவும், வரலாறு படத்தை கே.எஸ்.ரவிக்குமாரும் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.