பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகிவிட்ட பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதே ஷ்யாம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
பிரபாஸின் 21-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவிருக்கிறார். இதில் பிரபாஸ் ஜோடியாக முதல்முறையாக தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகேனேவுக்கு ரூ.20 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபாஸ் படத்திற்கு இந்திய அளவில் நல்ல மார்க்கெட் உருவாகியிருப்பதால் படம் பெரிய தொகைக்கு விலைபோகும் என்பதால் தீபிகா அதிக சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயர் தீபிகாவுக்கு கிடைக்கும்.
சயின்ஸ் பிக்சன்ஸ் கதையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.