பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகிவிட்ட பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதே ஷ்யாம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், பிரபாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
பிரபாஸின் 21-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவிருக்கிறார். இதில் பிரபாஸ் ஜோடியாக முதல்முறையாக தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார்.

மகாநதி படத்தை தயாரித்த வைஜெயந்தி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக இருப்பதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.Deepika Padukone, welcome on board! Thrilled to have you be a part of this incredible adventure. #Prabhas @deepikapadukone @nagashwin7#Prabhas21 #DeepikaPrabhas pic.twitter.com/PLdgPT6igz— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 19, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.