பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய்பல்லவி - வரலட்சுமி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். பிரபு தேவா நடனம் அமைத்த இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மாரி 2 படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் வைரலான இந்த பாடல், அதிகமான பார்வையாளர்களை பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தது.
மாரி 2 படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் வைரலான இந்த பாடல், அதிகமான பார்வையாளர்களை பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தது.
— Raja yuvan (@thisisysr) July 19, 2020மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. அந்த வகையில், தற்போது இந்த பாடல் யூடியூப்பில் 900 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.