Skip to main content

தமிழ் கற்பிக்கும் இணையதளம் - மதன் கார்க்கியின் புதிய முயற்சி

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி, தமிழ் கற்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக கற்றுக் கொள்வதற்கு முயற்சி எடுத்திருக்கிறார்.

இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து, அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள்.

‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வயதினரும் இணைந்து பயிலலாம். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்த பாடத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மதுரையில் உள்ள குயீன் மீரா பன்னாட்டுப் பள்ளி நிர்வாகம் பயில் பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறார்கள். பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலை வடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவித்து வருகிறார்கள்.

பயில் பாடத்திட்டத்தின் ‘எழுது’ வகுப்பு மிக எளிமையான புதுமையான முறையில் தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து எழுத்தின் ஒலிகளுக்கான விதிகளையும் விளக்குகிறது. ‘பேசு’ வகுப்புகள் பேச்சுத் தமிழுக்கான எளிய விதிகளையும் வெவ்வேறு சூழல்களில் பேசப்படும் சொற்களையும், சொற்றொடர்களையும் வரைபடங்கள் கொண்டு விளக்குகிறது. இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் அச்சமின்றி தமிழில் பேசத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரோடும் பிற மாணவர்களோடும் பேசி விளையாடும் விளையாட்டுக்களால் இந்த வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

முப்பது நாட்களில் தமிழ் இலக்கண அடிப்படையை பயிற்றுவிக்கும் ‘இலக்கணம்’ வகுப்பு எளிமையான முறையில் படிப்படியாக தமிழ் இலக்கணத்தை விளக்குகிறது.

சங்க இலக்கியம் முதல் தற்காலத் திரைப்பாடல்கள் வரை வெவ்வேறு கதைகள், பாடல்கள், இலக்கிய வகைகளை அறிய, சொற்களையும் பொருளையும் புரிந்து கொள்ள, இலக்கியங்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள ‘இலக்கியம்’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்’ என்ற ஆசிரியரின் வரியை நீங்கள் எப்படி மாற்றி எழுதுவீர்கள்? ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்ற வரியில் ஏன் ஆசிரியர் மீனை மீண்டும் ஆற்றில் விட வேண்டும் என்கிறார்? போன்ற கேள்விகளால் சிந்தனையையும், ஆற்றல் திறனையும் வளர்க்கும் நோக்கில் ‘இலக்கிய’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

www.karky.in/payil என்ற இணையதளத்தில் இந்த வகுப்புகளைப் பற்றிய விவரங்களை அறியலாம். உலகெங்கும் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு இந்த பாடத்திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

ரஜினி ரசிகராக சுஷாந்த் - தில் பேச்சரா படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ந் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவரது தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர், நடிகைகள் தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. பலரும் தங்களது அனுபவங்களை பகிர ஆரம்பித்தனர். இந்த நிலையில், சுஷாந்த் கடைசியாக நடித்த 'தில் பேச்சரா' படம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். காரணம், தில் பேச்சரா படத்தில் சுஷாந்த் சிங் தீவிர ரஜினி ரசிகராக நடித்திருக்கிறார். படத்தில் அவர் ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருக்கிறார். சுஷாந்த் சிங் பயன்படுத்தும் செல்போன் கவரில் கூட ரஜினியின் படம் இடம்பெற்றிருக்கிறது. நான் ரஜினியை வணங்குகிறேன் என்ற வசனமும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ...

அதிகப்பிரசங்கித்தனம் பண்ண வேண்டாம் - கமல் ரசிகருக்கு குஷ்பு பதிலடி

சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். கமர்ஷியல் படங்களை இயக்குவதால் பொதுவாகவே சுந்தர்.சி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், இந்த படம் தொடக்கத்தில் பெரிதாக பேசப்படவில்லை. தொலைக்காட்சியில் திரையிட்ட பிறகே படத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் வெளி வந்தன. இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் IMDB இணையதளத்தில், தமிழ் சினிமாவில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தால், என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று கூறினார். There block busters..😊👍 https://t.co/moMHiG5yrE — KhushbuSundar ❤️ (@khushsundar) June 16, 2020 மற்றொருவரின் கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, வின்னர் 2001-ஆம் ஆண்டு ரிலீசாக வேண்டிய படம், 2 வருடங்கள் தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்விக்கு பிறகு, நாங்கள் சொந்தமாக கிரி படத்தை எ...

காதல் பல புள்ளிகள் சேர்ந்த அழகிய கோலம் - கேர் ஆப் காதல் விமர்சனம்

படத்தில் 4 கதைகள் ஒன்றாக பயணிக்கிறது. இந்த நான்கு கதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் காதலை மையப்படுத்தி செல்கிறது. ஒன்று  பள்ளிப்பருவ  காதல், மற்றொன்று இளமைப்பருவத்திலும், மற்றொன்று 30 வயதிலும், நான்காவது 49 வயதிலும் வளர்கிறது. இந்த நான்கு காதலையும் மிக நேர்த்தியாகவும்,  சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதில் எந்த கதையும் சோர்வு ஆகாதபடி மிகவும் ரசிக்கும்படியாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு கோலத்தில் புள்ளிகள் தள்ளித்தள்ளி இருந்தாலும் கடைசியில் ஒரு கோலமாக அனைத்தும் புள்ளிகளும் இணைவது போல் இந்த நான்கு காதலும் ஒரே புள்ளியில் இணைகிறது. சிறுவயது மாணவனாக நடித்திருக்கும் நிஷேஸ், மாணவி ஸ்வேதா மற்றும் மாணவனின் தந்தை மனதில் நிற்கிறார்கள். 20 வயது காதல் ஜோடிகளாக கார்த்திக் ரத்தனம், ஐரா, 30 வயது காதல் ஜோடிகளாக வெற்றி, மும்தாஜ், நான்காவதாக என் தீபன் சோனியா கிரி 49 வயதாகியும் திருமணமாகாத தீபன். கல்லூரி படிக்கும் மகள் இருக்கும் சோனியா கிரி என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குணசேகரனின் ஒளிப்பதிவும், சுதாகர் அகஸ...

ஒத்த செருப்பு குறித்து கேலி செய்த தி.மு.க எம்.பி. - தக்க பதிலடி கொடுத்த பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் படங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு விருது அறிவித்தது.           அதனை குறிப்பிட்டு தி.மு.க எம்.பி எஸ்.செந்தில்குமார் அண்ணனுக்கு பாஜாவில் ஒரு சீட்டு பார்சல் என்று கேலி செய்துள்ளார். அவரது அந்த கருத்துக்கு சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது கருத்துக்கு பார்த்திபன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,           ‘இரவின் நிழல்’ என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும் வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! (மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம். அது ஒரு கொக்கி வார்த்தை-மேலும் படிக்க)           பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு D...

திடீரென ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முகென் ராவ் !!

 முகென் ராவின் மனதை மயக்கும் மயக்கிறியே!! சரிகமா ஒரிஜினல்ஸின் அடுத்த வெளியீடான பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் உருவாகியிருக்கும் ‘மயக்கிறியே’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பாடலின் முன்னோட்டம், சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. ‘ஃபிளாஷ் மாப்’ என்று அழைக்கப்படும் நடன நிகழ்ச்சியின் போது, இந்த பாடலில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘பிக்பாஸ்’ பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். மேலும், ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்திற்கிடையே முகென் ராவ் நடனமாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் ஆட, ஒட்டுமொத்த திரையரங்கமும் விழாக்கோலமானது. ஏ என் எஸ் என்டெர்டயின்மென்ட் வழங்கும் ‘மயக்கிறியே’ பாடலை ஆனந்த் ஆர், ஆர் எம் நாகப்பன் மற்றும் நிக் ஸ்டெல்சன் ஜோ ஆகியோர் தயாரித்துள்ளனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அனிவீ இசையில், அனிருத் குரலில் உருவாகியிருக்கும் இந்த பாடலை ஜிம்மி ரூத் இயக்கியிருக்கிறார். மணிகண்டன் ஒளிப்ப...