கருப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக செந்தில்நாதன், குகன், சோமசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்து கடவுள்கள் பற்றி மோசமாக விமர்சனங்களும் அந்த சேனலில் இடம்பெற்றுள்ளதையடுத்து அந்த சேனலில் இடம்பெற்றுள்ள 500 வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கிவிட்டனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா !!

— Rajinikanth (@rajinikanth) July 22, 2020இவ்வாறு கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.