கருப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்து கடவுள்கள் பற்றி மோசமாக விமர்சனங்களும் அந்த சேனலில் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் ராஜ்கிரண் கந்த சஷ்டி கவசம் குறித்து கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, கந்த சஷ்டி கவசம் என்பது, ஒரு பாதுகாப்பு அரண். அதை ஆழ்ந்து படித்தால், அறிவியல் பூர்வமான, மனோதத்துவ ரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.
இறைவனை நம்பாதோர்க்கு, நம்பாமை என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, நம்புதல் என்பதே சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது.
இந்த கொடிய கொரோனா கால கட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில் யாரோ உள் நோக்கத்துடன் இதை செய்வதாகவே நினைக்கத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.