விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. ஆனந்த கிருஷ்ணன், விஜய் மில்டன், பாலாஜி கே.குமார் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்தை பிரியா கிருஷ்ணசாமி இயக்கவிருக்கிறார். பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை ரித்திகா சிங், அவருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். பாலாஜி கே.குமார் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரித்திகா நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் பிராபிட் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.So happy to be associated with this team ❤️#HBDVijayAntony #DirBalajiKumar pic.twitter.com/DJQiqMKPFD— Ritika Singh (@ritika_offl) July 24, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.