தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகரான சரத்குமார் சமீபகாலமாக படங்களில் அதிகமாக நடிப்பதில்லை. கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் பாம்பன் படம் உருவாகி வருகிறது. இதுதவிர மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போதைய காலகட்டத்தை பொறுத்த வரை இணை தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பல்வேறு முன்னணி நடிகர்களும் இணைய தொடர்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சரத்குமாரும் பிரபல ஓடிடி தளத்திற்காக நடிக்கவிருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடரின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர்களில் சரத்குமார் மாஸ் தோற்றத்தில் ஸ்டைலாக நிற்கிறார். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அர்ச்சனா எழுதிய பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே என்கிற நாவலை தழுவி இந்த தொடர் உருவாக இருக்கிறது.
கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரவீன் நாயர் இதனை இயக்குகிறார். சரத்குமாருடன் இணைந்து நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொடர் அல்லு அர்விந்தின் ஆஹா தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஓர் சீரியல் கொலையாளியை தேடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.A Good day to welcome you to the OTT world! ✨ Happy Birthday Sarath!@realsarathkumar @rayane_mithun @adamworx pic.twitter.com/yGUgx6O2CJ— Radikaa Sarathkumar (@realradikaa) July 14, 2020
கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரவீன் நாயர் இதனை இயக்குகிறார். சரத்குமாருடன் இணைந்து நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொடர் அல்லு அர்விந்தின் ஆஹா தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.