மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயி, சோனு சூட் |
கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்த அந்த விவசாயி, தனது நிலத்தை உழுவதற்கு தேவையான ஜோடி மாடுகள் வாங்க தன்னிடம் பணமில்லாத காரணத்தால் தனது இரு மகள்களை நிலத்தை உழ வைத்துள்ளார். அந்த விவாசியின் மகள்கள் நிலத்தை உழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் பார்வைக்கு வர, அவர் அந்த விவசாய குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளார். அந்த வீடியோவை குறிப்பிட்டு சோனு சூட், நாளை காலை இரு காளை மாடுகள் அந்த விவசாயிக்கு கிடைக்கும். அந்த பெண்கள் இருவரும் அவர்களது படிப்பில் கவனம் செலுத்தட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா பெருந்தாற்றல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் என பலருக்கு சோனு சூட் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.Tomorrow morning he will have a pair of ox 🐂 to plough the fields. Let the girls focus on their education.. कल सुबह से दो बैल इसके खेत जोतेंगे. किसान हमारे देश का गौरव है।Protect them. 🙏 https://t.co/oWAbJIB1jD— sonu sood (@SonuSood) July 26, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.