மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான தளபதி 65 படத்தை தயாரிக்க இருந்த சன் பிக்சர்ஸ் பட்ஜெட் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி பரவி வந்தது.
இந்த நிலையில், அந்த தகவல் வெறும் வதந்தி என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படத்தை தயாரிப்பதில் சன் பிக்சர்ஸ் உறுதியாக இருப்பதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே படத்தின் பட்ஜெட், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் தமன் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகதாஸ் தற்போது தளபதி 65 படத்திற்கான திரைக்கதை எழுதுவதில் பிசியாக இருக்கிறார். இந்த படம் குறித்து விஜய் மற்றும் கலாநிதி மாறன் எடுக்கும் இறுதி முடிவைத் தொடர்ந்து மற்ற பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.