பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறார். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை இசைக் கலைஞராகவும் இருக்கிறார். இவர் தற்போது ‘கால் டாக்ஸி’ என்கிற படத்தில் ‘கிக்கு செம்ம கிக்கு...’ என்ற குத்துப் பாடலை பாடியுள்ளார்.
தற்போது இந்த பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை எழுதி, இசையமைத்திருக்கிறார் பாணர்.
கே.டி.கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கபிலா தயாரித்துள்ள இந்த படம் தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதன் பின்னணியில் இருக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பா.பாண்டியன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், மதன்பாப், ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு டேவிட் அஜய் படத்தொகுப்பை கவனிக்க, எஸ்.ஆர்.ஹரிமுருகன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.