லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சுவாமிநாதன் |
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான வி.சுவாமிநாதன் இன்று காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபடப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளரான இவர் பகவதி உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் பரிட்சயப்பட்டவர். இவரது மகன் கும்கி அஸ்வின் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கோகுலத்தில் சீதை, பிரியமுடன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னருகே நானிருந்தால், சுந்தர்.சி தயாரித்த உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, பகவதி, தோஸ்த், அன்பே சிவம் புதுப்பேட்டை, சிலம்பாட்டம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிநாதனின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.