மாஸ்டர் படத்தில் விஜய், மாளவிகா மோகனன் |
இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பெரும்பாலானோர் மாஸ்டர் படம் பற்றியே கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்தில் உங்களது கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்று கேட்க, அதற்கு பதிலளித்த மாளவிகா, எனது கதாபாத்திரத்தின் பெயர் சி என்ற முதல் எழுத்துடன் துவங்குவதாக கூறி, இதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும், முழுசா சொன்னா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்றுவிடுவார் என்று கூறியுள்ளார்.
மேலும் மாஸ்டர் படம் படத்தில் நடித்தது மிகவும் சுவாரஸ்யமானது என்றும், நான் நடித்த படங்களில் இளமையான, திறமையான, பைத்தியக்காரத்தனமான குழு மாஸ்டர் படக்குழு என்றும் கூறியுள்ளார்.It starts with a ‘C’ 😉 but if I reveal more @Dir_Lokesh will kill me 😅 https://t.co/6j9Tgx4lqf— malavika mohanan (@MalavikaM_) August 4, 2020
யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக ஒருவர் கேட்க, இயக்குனர் வெற்றிமாறனின் தீவிர ரசிகை நான், அவரது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாளவிகா, ஒவ்வொரு முறை தான் சென்னை வரும் போதும் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தனது தோழிகளிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.