ராகவா லாரன்ஸ் |
வேட்டையபுர மன்னனுக்கும் - சந்திரமுகிக்கும் இடையே நடக்கும் மோதலை மையப்படுத்தி படம் உருவாகும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து சந்திரமுகியாக ஜோதிகா நடிக்கவிருப்பதாக முதலில் தகவல் வெளியானது. பொன்மகள் வந்தால் படத்திற்கான புரமோஷனின் போது, அளித்த பேட்டியில் ஜோதிகா அதனை மறுத்தார். பின்னர் ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சிலர் தகவல்களை வெளியிட்டனர்.
சிம்ரனும் குறிப்பிட்ட அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் தன்னை அணுகவில்லை என்று தெளிவுபடுத்தினார். இந்த நிலையில், சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் ஜோடியாக கியாரா அத்வானி படத்தில் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், சந்திரமுகி 2 படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகள் அனைத்து தவறானது. படத்தின் திரைக்கதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தயாரிப்பு நிறுவனம் படத்தின் நாயகி யார் என்பதை அறிவிக்கும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.Chandramukhi 2 pic.twitter.com/sArxsvp3XN— Raghava Lawrence (@offl_Lawrence) August 1, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.