சூர்யா |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் அதிக அளவில் உள்ளது என்றும் விஜய், சூர்யா நெப்போட்டிச தயாரிப்புகள் என்றும் கடுமையாக சாடினார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
பின்னர், விஜய் மனைவி சங்கீதாவைப் பற்றியும் சூர்யா மனைவி பற்றி ஜோதிகா குறித்தும் அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். இதையடுத்து, மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது. அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார். மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் விஜய். பல்வேறு அடித்தளங்கள் அமைத்து விஜயும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர். அதேபோல் விஜய், சூர்யா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. https://t.co/qR32iviTfO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
பாரதிராஜாவின் அறிக்கையை தொடர்ந்து நடிகர் சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள். என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.