வைரமுத்து, ரஜினிகாந்த் |
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் 45-வது வருட சினிமா வாழ்க்கை குறித்தும், அவருடன் பணிபுரிந்தது குறித்தும் பலரும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் வெற்றியின் ரகசியம் பற்றி தெரிவித்துள்ளார். வைரமுத்து கூறியிருப்பதாவது,
நகலெடுக்க முடியாத
உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!
இவ்வாறு கூறியிருக்கிறார்.
நகலெடுக்க முடியாத
— வைரமுத்து (@Vairamuthu) August 10, 2020
உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!@rajinikanth
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.