லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், சன் பிக்சர்ஸ் - ஏ.ஆர்.முருகதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தில் இருந்து விலகினார்.
இதையடுத்து தளபதி 65 படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், தளபதி 65 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் மகிழ் திருமேனி உதயநிதி நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
எனவே விஜய்யின் அடுத்த படத்தை அவர் இயக்கமாட்டார் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், தளபதி 65 படத்தை விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய பேரரசு இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்த போது, மாஸ்டர் இன்னும் வெளியாகாத காரணத்தால், விஜய் தனது அடுத்த படம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், விஜய் - பேரரசு சந்தித்து பல மாதங்கள் இருக்கும். அந்த சந்திப்பை வைத்து இந்த தகவலை பரப்பி விட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.