விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறிவிட்டார் அட்லி. அதேநேரத்தில் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். ஜீவா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரித்த அட்லி, அடுத்ததாக அந்தகாரம் என்ற படத்தை ஃபேஷன் ஸ்டூடியோசுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
சுசி சித்தார்த்தா இயக்கியிருக்கும் இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், மிஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முடிந்து படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.
அட்லி தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார். அந்தகாரம் வருகிற நவம்பர் 24-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
I am delighted that Andhaghaaram has found a home on Netflix. The film has been appreciated by many already &through @NetflixIndia, it will reach audiences around India and the world, who have a taste for stories, regardless of language. #Andhaghaaram pic.twitter.com/eIwag8Hp9Y
— atlee (@Atlee_dir) October 30, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.