தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. 80, 90-களில் அவர் இல்லாத படங்களே கிடையாது என்னும் அளவுக்கு கவுண்டமணியும், செந்திலும் காமெடியில் பட்டைய கிளப்பினர்.
பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவ்வப்போது ஏதாவது ஒரு சில படங்களில் அவரை பார்க்கலாம்.
இந்த நிலையில், கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் சிலர் வதந்திகளை பரவ விட்டுள்ளனர். இது போல் பலமுறை வதந்திகள் வந்தும் பொறுமை காத்த கவுண்டமணி இந்த முறை அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இப்படி ஏதாவது வதந்திகளைக் கிளப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் என வருத்தப்பட்டுள்ள கவுண்டமணி தான் வீட்டில் நலமாகவே இருப்பாக கூறியிருக்கிறார்.
வாட்ஸ்ஆப் வந்தாலும் வந்தது அதில் வதந்திகளை கிளப்பி பரபரப்பு ஏற்படுத்த சில மன நோயாளிகள் முயற்சி செய்கிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்கிற கவலையே அவர்களுக்கு இல்லை என காட்டமாக கூறியுள்ளார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.